கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் இருக்கும் நிலையில், அடுத்ததாக இவர் குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார்.

'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே... தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. இதை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து 'RRR ' என்கிற படத்தை இயக்கிவருகினார். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் இருக்கும் நிலையில், அடுத்ததாக இவர் குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது கேட்பதற்க்கே ஆச்சர்யமாக இருந்தாலும், இது தான் உண்மை என்கிறது தெலுங்கு திரையுலக வட்டாரம். அதாவது, கொரோனா பேரிடம் காலத்தில் தன்னுடைய உயிரையும் பெரிது படுத்தாமல், ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக பாடு பட்டு வரும் முன்களப்பணியாளர்கள் மற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களது வேலையையும் மையமாக வைத்து சுமார் 20 நிமிடம் ஒளிபரப்பாக கூடிய குறும்படம் ஒன்றை, விழிப்புணர்வு நோக்கத்தோடு இயக்க உள்ளாராம்.

இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியமாக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜமௌலி இயக்க உள்ள இந்த குறும்படத்தின் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த பணிகளை ஆர்ஆர்ஆர் படம் துவங்குவதற்கு முன்பே முடித்து ராஜமௌலி வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தெலுங்கானா காவல் துறையினரை குறும்படம் சம்பந்தமாக சந்தித்துள்ளதாகவும், தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.