பிரபல இயக்குனரும், நடிகருமான, ஆர்.சுந்தர் ராஜன் மரணமடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாக பரவியது.  இதனால் பலர் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழ் சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராகவும், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டவர் ஆர்.சுந்தர் ராஜன்.

இவர் கடந்த 1982ஆம் ஆண்டு தமிழ் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, சரணாலயம், நான்பாடும்பாடல், உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். 

மேலும் அவருடைய தனித்துவமான நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் மரணமடைந்ததாக வெளியான வதந்தி அவருடைய ரசிகர்களை மட்டுமின்றி, பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து இந்த தகவல் முற்றிலும் பொய் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இவருடைய மகன் தன்னுடைய தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய தந்தை நலமாக இருப்பதாகவும்... அவர் சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு , ஆரோக்கியமாக நடித்து வருகிறார்... இது போன்ற வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வதந்தி காரணமாக கூறப்படுவது... சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்.சுந்தர் ராஜன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிராக கருத்து தெரிவித்து பேசியதால் கோபமடைந்த அவருடைய ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் இது போன்ற வதந்தியை பரப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.