’சுய விளம்பரம் செய்துகொள்வதில் தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு அடுத்த கைதேர்ந்த ஆள் நானேதான்’ என்று ‘ஒத்தச் செருப்பு பட விளம்பரங்கள் மூலம் சொல்லாமல் சொல்லிக்கொண்டு வருகிறார் இயக்குநர் பார்த்திபன். அதன் உச்சமாக இன்றைய  ட்விட்டர் பதிவு ஒன்றை தனது பக்கத்தில் ஷேர் செய்ததன் மூலம் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’படத்தின் மானத்தை வாங்கியுள்ளார்.

ஒத்தச்செருப்பு படத்துக்கு ஒற்றை மனிதராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாங்கு மாங்கென்று விளம்பரம் செய்துவரும் பார்த்திபன் ‘படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கும்னு அமீர் கான் சொன்னாக அந்த அமிதாப் பச்சன் சொன்னாக’ என்று துவங்கி நேற்று இளையராஜாவைப் படம் பார்க்க வைத்தது வரை[ பொதுவாக தான் இசையமைக்காத படங்களை ராஜா பார்ப்பதில்லை]  சலிக்கச் சலிக்க விளம்பரம் செய்து வருகிறார். அந்த விளம்பரங்களின் நீட்சியாக இன்று தனது ட்விட்டர் பதிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’படத்தை ஒரு ரசிகர் தரை மட்டத்துக்கு கிண்டல் அடித்துள்ளதை டேக் செய்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அந்தப் பதிவில்,...’நம்ம வீட்டு பிள்ளை’ல நாப்பது பேரு இருக்காங்க ஒத்த கதாபாத்திரமும் மனசுல நிக்கல   ஆனா ஒரே ஒரு ஆள் தான் இருக்காரு  ஆனா நாப்பது பேரு கண்ணு முன்னாடி வந்து போறாங்க #ஒத்தசெருப்பு  @rparthiepan என்று அப்படத்தை மரண கலாய் கலாய்த்திருக்கிறார். அப்பதிவை மெத்த மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பார்த்திபன்,...R.Parthiban@rparthiepan...நீங்க மணவாளனா?மன'வாளனா? என்று கமெண்டும் அடித்துள்ளார்.