Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்கார் பெறப்போகும் பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படத்தை கால்கிலோ கத்தரிக்காய் விலைக்குக் கேட்கும் விநியோகஸ்தர்கள்...

ரஜினி,கமல் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரை ‘ஒத்தச்செருப்பு’படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கும் என்று பார்த்திபனை உற்சாகப்படுத்துவற்காக சொன்னதை அவர் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சதா ஆஸ்கார் கனவு கண்டுகொண்டு அலைகிறார்.இதன் மூலம் ஆஸ்கார் நாயகன் பட்டத்தை கமலிடமிருந்து அவர் கைப்பற்றிவிடக்கூடும் என்று தெரிகிறது.

director r.parthiban expecting oscar award for his film othacheruppu
Author
Chennai, First Published Sep 13, 2019, 4:42 PM IST

ரஜினி,கமல் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரை ‘ஒத்தச்செருப்பு’படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கும் என்று பார்த்திபனை உற்சாகப்படுத்துவற்காக சொன்னதை அவர் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சதா ஆஸ்கார் கனவு கண்டுகொண்டு அலைகிறார்.இதன் மூலம் ஆஸ்கார் நாயகன் பட்டத்தை கமலிடமிருந்து அவர் கைப்பற்றிவிடக்கூடும் என்று தெரிகிறது.director r.parthiban expecting oscar award for his film othacheruppu

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.திரைத்துறையில் வித்தியாச முயற்சியாக ஒரே கதாபாத்திரமாக படம் முழுவதும் பார்த்திபனே நடித்திருக்கிறார். ஒன் மேன் ஷோ-வாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், ஷங்கர், ஆமிர்கான், ரசூல் பூக்குட்டி, யாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள், பார்த்திபனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக் கூறினர்.

ஒத்த செருப்பு படத்தை பார்த்த பலரும், இந்த படத்தை பல திரைப்பட விருது விழாக்களுக்கு அனுப்பிய பிறகு, உலக அறங்கில் பாராட்டுக்களை குவித்த பிறகு படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், வெளிநாட்டு வியாபாரம் உள்நாட்டு வியாபாரத்தை விட மோசமாக இருந்ததால் அத்திட்டத்தை கைவிட்டார். அதே சமயம்  இப்படத்தை ‘ஆஸ்கர்’ விருது விழாவிற்கு அனுப்ப பார்த்திபன் திட்டமிட்டிருப்பதால், அதன் முக்கிய நிபந்தனையாக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டுமெனில், திரைப்படம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ரிலீசாகியிருக்க வேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் செப்.20ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக கூறினார்.director r.parthiban expecting oscar award for his film othacheruppu

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்ட அவர்,...வெளிநாடுகளில் வெளியிட இங்குள்ளவர்கள்,கால் கிலோ கத்திரிக்காய் வாங்கும்  விலையை தருவதாகச் சொல்கிறார்கள்! நம்மூர் தெய்வங்கள் தேவலை!உரிய மரியாதை வரும் வரை (கத்திரி விலை ஏறும்வரை) காத்திருக்கிறேன். இல்லையெனில் digital தான்! என்று குறிப்பிட்டுள்ளார். தன் படம் உறுதியாக ஆஸ்கார் விருது வாங்கப்போகிறது என்று பார்த்திபன் எத்தனையோ முறை கூவியும் கேவலம் வெளிநாட்டு உரிமையை கால்கிலோ கத்தரிக்காய் விலைக்குக் கேட்கும் கல்நெஞ்ச விநியோகஸ்தர்களை என்ன செய்வது?
 

Follow Us:
Download App:
  • android
  • ios