பிரபலங்களின் வாரிசுகள் சில சமயங்களில் சாதாரணமாக டிக் டாக்கில் பதிவிடும் வீடியோ கூட, வைரலாகி விடுகிறது. அந்த வகையில், பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள், ஹாசல் ஷைனி 'சச்சின்' பட டயலாக் பேசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது.

டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், ஆண்கள், பெண்கள், வயதானவர், குழந்தைகள் என எந்த பாகுபாடும் இன்றி, அனைவரும் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்ட வருகிறார்கள் . இதில் கிடைக்கும் லைக்குகள் அவர்களை இன்னும் நிறைய விடியோக்கள் போட ஊக்கப்படுத்துகிறது எனலாம்.அந்த வகையில் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பலர், வித்தியாசமான வகையில் டிக் டாக் போன்றவை செய்து, அதன் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஷாந்தனு உள்ளிட்டோர் தாங்கள் டிக் டாக்கில் இணைந்துள்ளதாக அறிவித்து சில வீடியோக்களை வெளியிட்டது வைரலாகியது.இந்நிலையில்,  தொடர்ந்து பல டிக்டாக் வீடியோக்கள் போட்டு ரசிகர்களின் பார்வையில் பட்ட பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள்,ஹாசல் ஷைனி தற்போது தளபதி விஜய் நடித்த 'சச்சின்' படத்தில், விஜய் மற்றும் ஜெனிலியா பேசிய வசனங்களை பேசி, வீடியோ வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. 

இந்த வீடியோவில், டபுள் ரோலில் இவர் பர்பாம் செய்துள்ளதை பார்த்து , பலர் வியர்த்து பாராட்டி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ இதோ...