Asianet News TamilAsianet News Tamil

அண்ணாத்த விமர்சனம் ; வக்கிரத்தோடு செயல்படும் யூட்யூப் சேனல்கள் ; பிரபல இயக்குனர் கண்டனம்

அண்ணாத்த  குறித்து சில யூட்யூப் சேனல்கள் செய்யும் தரம்தாழ்ந்த விமர்சனம் மன வேதனையளிப்பதாக உள்ளது  என பிரபல இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

director perarasu tweet about annaththa Criticism
Author
Chennai, First Published Nov 8, 2021, 11:22 AM IST

ஊர்பெயரில் படம் இயக்கி  பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. இவரின் படைப்புகள் அனைத்தும் திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை போன்ற ஊர் பெயர்களில் தான் அமைந்திருந்தது. சமீப காலமாக படங்களில் கமிட் ஆகாமல் இருக்கும் இயக்குனர் பேரரசு தற்போது திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் அண்ணாத்த படம் குறித்த விமரிசனங்கள் தன்னை மன வேதனைக்கு ஆட்படுத்தியதாக கூறியுள்ளார்.

director perarasu tweet about annaththa Criticism

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில்  தற்போது திரையரங்குகளில் ஓடி வரும் படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க எமோஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த படம் 90 s ரஜினியை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்ணன் -  தங்கை  உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்தது. ஆனால் ரஜினியின் ரசிகர்களுக்கு போதுமான தீனியை இந்த படம்கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. சமீபகாலமாக காலா, கபாலி, பேட்டை என தொடர்ந்து ஆக்சன் கதாப்பாத்திரங்களில் பிரதிபலித்த ரஜினி திடீரென மீண்டும் சென்டிமெண்டில் நுழைந்திருப்பது திருப்தி அளிக்கவில்லை என்றே பலரும் தெரிவித்து வருகின்றன. இந்த படம் பெண் ரசிகர்களை பெருதும் கவர்ந்திருந்தாலும், இளைஞர்கள் மத்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை என  ரசிகர்களின் கமெண்ட் சொல்கிறது. 

director perarasu tweet about annaththa Criticism

இந்த சூழலில்  யூட்யூப் சேனல்கள் அண்ணாத்த படம் குறித்த விமர்சனங்களை எக்கச்சக்கமாக செய்து வருகிறது. வழக்கமாக எந்த பிரபலத்தின் படமாக இருந்தாலும் நெகட்டிவாக செய்யப்படும் விமர்சனம் அதிக பார்வையாளர்களை கொண்டு வந்து சேர்க்க தான் செய்கிறது. இதன் பொருட்டே பல யூட்யூப்பர்களும் படத்தில் உள்ள சின்ன சின்ன மிஸ்டேக்குகளையும் ஊதி பெரிதாக்கி வருகின்றனர். அந்த வகை அண்ணாத்த படம் குறித்து வெளியாகியுள்ள்ள யூட்யூப்  விமர்சனங்கள் தன்னை மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios