சென்னை அசோக் நகரில் இயங்கி வரும், உதயம் தியேட்டர் மூடப்படுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, இயக்குனர் பேரரசு தன்னுடைய அதிர்ச்சியையும்... ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.  

சென்னை அசோக் நகரின் அடையாளமாகவே மாறிப்போன, உதயம் தியேட்டர்... சந்திரன், உதயம், சூரியன் என மூன்று ஸ்கிரீன்களுடன் பல வருடங்களாக இயங்கி வருகிறது. சமீப காலமாக, ரசிகர்கள் பலர் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் படம் பார்க்க விரும்புவதால், உதயம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. 

இதனால் இதனை வருடம் இந்த திரையரங்கை நிர்வகித்து வந்த உரிமையாளர் உதயம் தியேட்டரை, முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு பல கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இதை தொடர்ந்து, அங்கு விரைவில் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த தகவல், கடந்த உதயம் திரையரங்கில் படம் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

Poonam Bajwa: பிகினி பேபியாக மாறி.. நீச்சல் குளத்தில் டாப் ஆங்கில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! ஹாட் போட்டோஸ்!

மேலும் பல பிரபலங்கள் உதயம் தியேட்டர் பற்றிய தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வரும் நிலையில், பிரபல இயக்குனர் பேரரசு அதிர்ச்சியோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "நான் சென்னையில் முதன்முதலாக படம் பார்த்த தியேட்டர் 'உதயம்'
பார்த்த படம் ரஜினி நடித்த படிக்காதவன். அதனை தொடர்ந்து பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம்.
அதன் பிறகு உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டங்களில் நாயகன் உட்பட அதிகப்படியான படங்களை பார்த்தது உதயம் தியேட்டரில்தான்.

Vishnu Vishal Salary: 'லால் சலாம்' வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய விஷ்ணு விஷால்! முழு விவரம் இதோ!

நான் இயக்கிய சிவகாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி போன்ற அனைத்து படங்களும் உதயத்தில்தான் ரிலீஸ் ஆனது. என் இதயத்தோடு சம்பந்தப்பட்டது உதயம். இன்று உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது. ஏதோ மனம் கனத்துப் போனது. உன் வெண்திரையில் எத்தனையோ காதல் படங்கள் ஓடியிருக்கும், இன்று எங்கள் மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்... சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால், தியேட்டர் உதயத்திற்கும் அஸ்தமனமா? சென்னை என்றதுமே ஒருசில இடங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அதில் முக்கியமான ஒன்று உதயம் தியேட்டர் உதயமே! உன்மீது எந்தக் கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியமாய் தெரிவாய்... ரசிகன் பேரரசு என தெரிவித்துள்ளார்.