தான் 15 வருடங்களுக்கு 2004ல் இயக்கி,நடித்து வெளியிட்ட ‘குடைக்குள் மழை’படத்தின் அப்பட்டமான காப்பிதான் நேற்று வெளியாகியிருக்கும் அமலா பாலின் ‘ஆடை’படம் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்,பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் துகிலுரித்துள்ளார்.

‘மேயாத மான்’படத்தை இயக்கிய ரத்னகுமாரின் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிராங்க் ஷோ நடத்தும் பிராந்து பிடித்த பெண்ணாக அமலா பால் வருகிறார். இடைவேளைக்கு சற்றுமுன்னர் ஒரு பார்ட்டியில் அமலா ஓவர் போதையாகி விட அவரது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கிவிடுகிறார்க. அப்படி அவரை நிர்வாணப்படுத்தியது யார்? எதற்காக அப்படி செய்தார்?? என்று போகிற அக்கதையில் சுமார் 45 நிமிடங்கள் வரை அமலா ஆடையின்றியே அலைகிறார்.

இந்நிலையில் இப்படம் தனது ‘குடைக்குள் மழை’படத்தின் காப்பி என்று குமுறியிருக்கும் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று,...R.Parthiban
@rparthiepan
PRANKly speaking-ஆடை படத்தின்  மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது
வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும்
(eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது...என்று குழப்பமாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.