director pandiraj about hydro carbon plan
தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டாக மதிக்க பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்று கூடி தடையை தவிடுபொடியாக்கினார் .
தற்போது மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் தடை செய்ய வேண்டும் என்று, புதுக்கோட்டையில் ஒட்டு மொத்த விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று கூடி இந்த திட்டத்தை கொண்டு வர கூடாது என்று அறவழியில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் நெடுவாசலில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹைட்ரோகார்பன்எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என எச்.ராஜா கூறியுள்ளார்.
என்னுடைய நாட்டையும் , விவசாயத்தையும் மீட்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை நான் எதிர்ப்பதால் தேச துரோகியாக இருப்பதற்கு பெருமை படுகிறேன் .
ஹைட்ரோகார்பன் திட்டத்தை இங்கு கொண்டு வருவதன் மூலம் எங்கள் மக்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கும், எங்களுக்கு சோறு போடும் பூமியை சேத படுத்த விட மாட்டோம்... மேலும் இவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வர நினைத்தால் மீண்டும் ஒட்டு மொத்த மாணவர்களும் கூடுவார்கள் என கூறியுள்ளார் .
