Asianet News TamilAsianet News Tamil

'மாடு மேய்க்கிறவனையும் இரும்புக்கடை வியாபாரியையும் இயக்குநர்களாக்கும் பா.ரஞ்சித்...

’நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ? அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். 

director pa.ranjith's second movie audio function
Author
Chennai, First Published Nov 21, 2019, 10:14 AM IST

’நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ? அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித்' என்று பேசி பார்வையாளர்களை நெகிழ வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.director pa.ranjith's second movie audio function

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் இயக்குனர், தயாரிப்பாளர், பா.இரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.

அதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்,’நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ? அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்? என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் பேசி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார்.director pa.ranjith's second movie audio function

அடுத்து பேசிய இயகுநர் அதியன்,"தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக்கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன் அதன்பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை  இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை.   இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

இந்தப்படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவுசெய்யும். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்,  "நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்" என்றார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக்கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷ்னலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா அழகாக பண்ணி இருக்கிறார். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி" என்றார்

Follow Us:
Download App:
  • android
  • ios