இயக்குனர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய,  காலா படத்திற்கு பின், தன்னுடைய நீலம் புரோடக்ஷன் மூலம், சிறு பட்ஜெட் படங்களை தயாரிப்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  

இயக்குனர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, காலா படத்திற்கு பின், தன்னுடைய நீலம் புரோடக்ஷன் மூலம், சிறு பட்ஜெட் படங்களை தயாரிப்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் அடுத்ததாக ஹிந்தியில், 'பிர்சா முண்டா' பற்றிய பயோபிக் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அந்த படம் ஷூட்டிங் துவங்குவது பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும், இதுவரை வெளியாகவில்லை. எனவே இந்தப் படம் ஒரு சில காரணங்களால் தற்போது தாமதமாகி உள்ளது தெரிகிறது.

இந்நிலையில் தற்போது, பா.ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்களான கலையரசன், அட்டகத்தி தினேஷை வைத்து 'சல்பேட்டா' என்கிற ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் தற்போது 7 வருடங்களுக்கு பின் 'மகாமுனி' படத்தின் மூலம் வெற்றி படத்தை கொடுத்திருக்கும் ஆர்யாவும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் வடச்சென்னை பின்னணியை வைத்து உருவாக உள்ளதாகவும், பாக்ஸர்கள் பற்றிய கதை என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சல்பேட்டா என பெயரிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 'சல்பேட்டா' என்றால் சென்னை மொழியில் சாராயம் என்பதாகும்.

இந்த படத்தை, 'குரங்கு பொம்மை' படத்தை தயாரித்த, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.