Asianet News TamilAsianet News Tamil

கதைத் திருடர்களுக்கு பயம் வந்திருக்கிறது என்பதே போதுமானது... இயக்குநர் பா.ரஞ்சித்!

‘சினிமாவில் கதைத்திருட்டை கண்டுபிடிப்பதோ அதைத் தடுப்பதோ அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இவ்வளவு தாமதமாகவாவது வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்’ என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

director pa.ranjith about sarkar story issue
Author
Chennai, First Published Nov 5, 2018, 9:44 AM IST

‘சினிமாவில் கதைத்திருட்டை கண்டுபிடிப்பதோ அதைத் தடுப்பதோ அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இவ்வளவு தாமதமாகவாவது வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்’ என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

‘காலா’ படத்துக்குப்பின் இந்தியில் அமீர்கானை வைத்து அடுத்து இயக்கப்போகும் படத்துக்காக மும்பையில் சுமார் மூன்று வாரங்களுக்கும் மேலாக முகாமிட்டிருந்த பா.ரஞ்சித் நேற்றுமுன் தினம் சென்னை திரும்பினார். இதனால் அவரை சில தினங்களாக சினிமா விழாக்கள் எதிலும் காணமுடியவில்லை.  அந்த இடைவெளிக்குப்பின்,நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் குழந்தைகள் வரைந்த ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். director pa.ranjith about sarkar story issue

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பா.ரஞ்சித் ‘சர்கார்’ கதைத்திருட்டு பற்றிக் கேட்டபோது,’’ குறிப்பிட்ட படத்தை மையப்படுத்தி நான் கருத்துச்சொல்ல விரும்பவில்லை. ஆனால் சினிமாவில் கதைத்திருட்டு என்பது காலகாலமாக இருந்துவருகிறது. இதில் யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலான விஷயம். director pa.ranjith about sarkar story issue

படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது. அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் இதுவரை தமிழ்ச் சூழலில் யாரிடமும் இல்லை. ஆனால், தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios