சீன மோதலை தொடர்ந்து இந்தியாவில் அந்நாட்டு பொருட்களுக்கு எதிர்ப்புகள் அதிகம் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் பிரபல இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சீனப்பொருட்களை தெருவில் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளார். 

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனர் சக்தி சிதம்பரம் தனது அலுவலகத்தில் இருந்த சீன பொருட்களை தெருவில் தூக்கி எறிந்து அவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்த சம்பவம்  குறித்து அவர் கூறுகையில்,  ’லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து, தமிழ் மண்ணைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாகக் கொன்ற சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இதுவரை உபயோகித்த அனைத்து சீனப் பொருட்களையும் தீயிட்டு, கொளுத்த வேண்டும்.

இனி வரும் காலங்களில் சீன பொருட்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் உயிர்நீத்த தியாகிகளுக்கு நிஜமான நினைவாஞ்சலியாக இருக்கும். முன்னுதராணமாக இருக்க வேண்டும் என்று என் அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை, வாசலில் கொட்டி தீயிட்டு எரித்தேன். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் இருக்கும்' என்று கூறியுள்ளார்.