Director Nelson : பீஸ்ட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படக்குழுவினருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். 

சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக வெளியான சில மாதங்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படமும் கைவிடப்பட்டது. முதல் படமே முடங்கியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நெல்சன் மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்க சென்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து பிக்பாஸ், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை இயக்கிவந்த நெல்சனுக்கு கடந்த 2018-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததை அடுத்து சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன்.

டார்க் காமெடி படமான இது கடந்தாண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன். கடந்த மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்தது.

பீஸ்ட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படக்குழுவினருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் நடிகரும், பீஸ்ட் படத்தின் உதவி இயக்குனருமான கவின், நகைச்சுவை நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, சுனில் ஷெட்டி ஆகியோர் உடன் சென்றுள்ளனர். இவர்களுடன் டாக்டர், டான் பட ஹீரோயின் பிரியங்கா மோகனும் உடன் சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்... Sembi :குக் வித் கோமாளி அஸ்வினுடன் சீரியஸ் ரோலில் கோவை சரளா! மிரள வைக்கும் பிரபுசாலமனின் ‘செம்பி’ பர்ஸ்ட் லுக்