தாராளமாக என்னை கைது செய்யுங்கள் என்றும், ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? என தியாகி லெவலுக்கு வாய் பேசியது கடும் கண்டனங்களை குவித்து வருகிறது. 

சோசியல் மீடியாவில் பப்ளிசிட்டி தேடுவதற்காக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என் மூஞ்சியை எல்லா நடிகைகளும் திருடிட்டாங்க என பீதி கிளப்பியது வரை மீரா மிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த விவகாரத்தில் ரசிகர்களைக் கடந்து சோசியல் மீடியாவில் திரையுலகினர் பலரும் கூட கடுமையான விமர்சனங்களை மீரா மிதுன் மீது முன்வைத்தனர். இன்ஸ்டாகிராமில் ஆடையில்லாமல் புகைப்படங்களை பதிவிடுவது, யூ-டியூப்பில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை பற்றி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுவது என சுற்றி வந்த மீரா மிதுன், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

எனவே மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென புரட்சி பாரதம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தாராளமாக என்னை கைது செய்யுங்கள் என்றும், ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? என தியாகி லெவலுக்கு வாய் பேசியது கடும் கண்டனங்களை குவித்து வருகிறது. மேலும் ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது, அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்றும் சவடாலாக வேறு பேசி பலரிடமும் வாங்கிக்கட்டிக் வருகிறார். 

Scroll to load tweet…

இந்நிலையில் இயக்குநர் நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சமூகநீதியே தமிழகத்தின் முதன்மை கொள்கை என்பதையும், சக மனிதர்களை சாதி அடிப்படையில் இழிவாக பேசுவதை தமிழகம் ஏற்காது என்பதையும் உணர்த்தும் நேரமிது. இந்த பெண் மீது இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை தமிழக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு டேக் செய்தும் உள்ளார்.