director naren karthi official announced 3 rd moive

இளமையும் துடிப்பும் நிறைந்த இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் 75 வது நாள் விழாவை கொண்டாடினர் படக்குழுவினர் அப்போது பேசிய கார்த்திக் நரேன் கூகுள் பார்த்துதான் சினிமாவே கற்றுக் கொண்டேன் என்றார். 

வயதில் சிறியவராக இருந்தாலும் யாரிடமும் உதவியாளராக சேராமல் தானாகவே முன்னேறி வந்தவர். இவர் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்திற்காக , இவருக்கு சிறந்த கதைக்கான விருது கிடைக்கப்பெற்றது.



அதன் பின்னர் தற்போது, இவர் நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார். கௌதம் வாசுதேவ்மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்திப் கில்சன் , இந்திரஜித், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.