director nalan kumarasamy marriage

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'சூது கவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்து பிரபல இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் நலன் குமாரசாமி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

`பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ காணோம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இதுதவிர இவரது எழுத்தில் `மாயவன்’ படம் உருவாகி இருக்கிறது. 

இந்நிலையில் நேற்று இவருக்கும் இவருடைய உறவுக்காரப் பெண் சரண்யா என்பவருக்கும் அவருடைய சொந்த ஊரான திருச்சியில் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் சொந்தக்காரர்கள், நண்பர்கள் மட்டும் இன்றி, நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, நடிகர் பார்த்திபன், நடிகை மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினர்.