director nalan kumarasamy marriage

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து, 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.

இயக்குநராகிய பிறகு தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார் இவர். நேற்று நலன் குமாரசாமியின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் கோதமங்கலம் என்ற கிராமத்தில் அவருக்கும் சொந்தக்காரப் பெண்ணான சரண்யா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறதாம். இவருடைய நிச்சயதார்த்த விழாவில் சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்றாலும், திருமணத்தில் திரையுலகைச் சேர்த்த பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.