மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருத்த "சைக்கோ" படம் தியேட்டர்களில் மரண பீதியில் சீட் நுனியில் உட்கார வைத்தது. 

இதையும் படிங்க: "தலைவர் 168" படத்தில் நயன்தாராவிற்கு இப்படி ஒரு கேரக்டரா? சத்தமே இல்லாமல் கசிந்த அதிரடி தகவல்...!

முன்னணி இயக்குநராக வலம் வரும் மிஷ்கின், சில வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அப்படி மிஷ்கின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதையும் படிங்க: இளைத்து போன தேகம், களைத்துப்போன முகம்... கீர்த்தி சுரேஷுக்கு என்னாச்சு..? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

இந்நிலையில் பிரபல விருது விழா ஒன்றில் பங்கேற்று பேசிய மிஷ்கின், சூப்பர் டீலக்ஸ் படத்தில் என்னை நடிகை ரம்யா கிருஷ்ணன் அடிப்பது போல் ஒரு காட்சி வரும், அந்த ஒரு சீனுக்காக மட்டும் 160 ரீ-டேக்குகள் வாங்கி ரம்யா கிருஷ்ணன் தன்னை அடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் தான் இயக்கும் படங்களுக்காக மட்டுமல்ல, நடிக்கும் படங்களுக்காகவும் எதையும் செய்ய துணிபவர் மிஷ்கின் என்பது தெரியவந்துள்ளது.