சில நாட்களாக கோடம்பாக்கத்தில் தனது நடமாட்டத்தை குறைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்த மிஷ்கினின் சில புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகிவருகின்றன. அவர் விஷாலை வைத்து ‘துப்பறிவாளன் 2’படத்தை இயக்கவிருப்பதால் ஒரிஜினலாகவே துப்புத் துலக்குவதுபோல் போஸ் கொடுத்திருக்கும் அப்படங்கள் குறித்து பல நகைச்சுவையான கமெண்டுகள் நடமாடிவருகின்றன.

விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்கியராஜ், வினய், அனு இமானுவேல், சிம்ரன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 இல் வெளியாகி ஹிட் அடித்த படம் துப்பறிவாளன். விஷால் பிலிம் பாக்டரி சார்பில் படத்தை தயாரித்த விஷால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.அந்த வெற்றிக்களிப்பில் இதன் இரண்டாம் பாகம் கட்டாயம் வெளிவரும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் மிஸ்க்கின் லண்டனில் லொகேஷன் தேடும் பணியில் இருப்பதாக பிரசன்னா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மேலும் இயக்குனர் ஷெர்லோக் ஹோம்ஸ் அவர்களின் அருங்காட்சியகம் சென்றுள்ளார். இந்த போட்டோஸ் ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.துப்பறியும் நாவல்களை கொடுத்த புத்திசாலி ஆர்தர் கானன் டாயல். தன்னைத்தானே துப்பறிவாளனாக நினைத்துக் கொண்டு படைக்கப்பட்ட கதாபாத்திரம்தாம் ஷெர்லக் ஹோம்ஸ். டாயலுக்கு கொக்கெய்ன் பழக்கம் அவ்வப்போது உண்டு.டாயலும் மிஸ்கினும் தன்னை ஒரு ஷெர்லக் ஹோம்ஸ் என்று நினைத்துக்கொள்வதுண்டு. ஸோ இன்னும் சில மாதங்களில் துப்பறியும் ஒரு காமெடிப்படம் ஒன்று நம்மை நோக்கி வரவிருக்கிறது.