director muktha srinivasan death

பழம் பெரும் இயக்குனர், முக்தா சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று இரவு காலமானார். 88 வயதாகும் இயக்குனர் முக்தா சீனிவாசன், தஞ்சை மாவட்டத்தில் பிறந்து இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்தவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'இமயம்', 'கீழ்வானம் சிவக்கும்', ஜெயலலிதா நடித்த 'சூர்யகாந்தி', ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், கமல் நடித்த 'சிம்லா ஸ்பெஷல்' உள்ளிட்ட 65 படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் நடித்த 'முதலாளி' படத்தை இயக்கியதற்காக தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகர் கமலஹாசன் நடித்த 'நாயகன்' உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். 

வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் சில வருடங்களாக அவதி பட்டு வந்த இவர், நேற்று இரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவருடைய உடலுக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.