director mohanraja apologies to actress sneha
இயக்குனர் மோகன் ராஜா 'தனி ஒருவன்' படத்திற்குப் பின் மிகவும் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார். இந்தப் படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியையும் பல விருதுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் 'வேலைக்காரன்'. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில், சிநேகா உள்ளிட பலர் நடித்திருந்தனர்.

திருமணமான சில ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படத்தில் நடிகை சிநேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்காக கடினமான உடற் பயிற்சிகள் செய்து தன்னுடைய எடையைக் குறைத்தார் சிநேகா. ஆனால் இவர் நடித்த பெரும்பாலான பகுதிகள், இந்தப்படத்தில் இடம் பெறவில்லை. சிநேகாவின் ஒட்டு மொத்த காட்சியே வெறும் 5 நிமிடம் தான் திரையில் வந்தது.

இது சிநேகாவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மிகவும் கோபமான கருத்துக்களை வெளியிட்டார். இதுபோல் எந்த ஒரு திரைப்படத்திலும் தன்னை அசிங்கப்படுதியது இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் மேலும், இதில் இடம் பெற்றிருந்த 5 நிமிடக் காட்சிகளுக்கு 18 நாள் ஷூட்டிங் நடத்தியது ஏன் என கேள்வியும் எழுப்பி இருந்தார்.

இந்தத் தகவலை அறிந்த இயக்குனர் மோகன் ராஜா... இந்தப் படத்தில் சினேகாவின் காட்சிகள் அதிகமாக இடம்பெறாததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
