தன்னைத் துணை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு இணை நடிகர் வாய்ப்புக் கொடுத்த விஜய் சேதுபதி...

‘தென் மேற்குப் பருவக்காற்று’படத்தின் மூலம் கதாநாயகனாக புரமோஷன் பெற்ற விஜய் சேதுபதி அதற்கு முன்பு ‘சிறுத்தை’,’புதுப்பேட்டை’உள்ளிட்ட  பத்துக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக ஓரிரு காட்சிகளில் வந்துபோனது ஊரறிந்த கதை. அந்த சமயங்களில் தான் வெறும் 300 ரூபாய் பேட்டா வாங்குவதற்காக நாள் முழுக்க காத்திருந்ததை பல பேட்டிகளில் வலியுடன் பகிர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

director mohan raja in vijay sethupathi movie

‘எம்.குமரம் சன் ஆஃப் மகாலட்சுமி’படத்தில் விஜய் சேதுபதி துணை நடிகராக வந்துபோனதை நினைவூட்டும் விஜய் சேதுபதி ரசிகர்கள்,..’பாருங்கய்யா துணை நடிகர் வாய்ப்புக் கொடுத்த டைரக்டருக்கே இணை நடிகர் வாய்ப்புக் கொடுத்து அழகு பாக்குறாரு எங்க விஜய் சேதுபதி... என்று புளகாங்கிதமடைந்து வருகிறார்கள்.director mohan raja in vijay sethupathi movie

‘தென் மேற்குப் பருவக்காற்று’படத்தின் மூலம் கதாநாயகனாக புரமோஷன் பெற்ற விஜய் சேதுபதி அதற்கு முன்பு ‘சிறுத்தை’,’புதுப்பேட்டை’உள்ளிட்ட  பத்துக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக ஓரிரு காட்சிகளில் வந்துபோனது ஊரறிந்த கதை. அந்த சமயங்களில் தான் வெறும் 300 ரூபாய் பேட்டா வாங்குவதற்காக நாள் முழுக்க காத்திருந்ததை பல பேட்டிகளில் வலியுடன் பகிர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.director mohan raja in vijay sethupathi movie

இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்தில் இயக்குநர் மோகன் ராஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட்டது, இந்த அறிவிப்பை ஒட்டி பழைய ஃப்ளாஷ்பேக் ஒன்றை நினைவு கூர்ந்த விஜய் சேதுபதி ரசிகர்கள், இதே இயக்குநர் மோகன் ராஜாவின் ‘எம்.குமரம் சன் ஆஃப் மகாலட்சுமி’படத்தில் விஜய் சேதுபதி ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாகத்தான் நடித்தார். ஆனாலும் அதை மறந்து பெருந்தன்மையுடன் இன்று விஜய் சேதுபதி படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கவைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios