தனது முதல் படமான அட்டக்கத்தி படத்திலிருந்து மெட்ராஸ், கபாலி, காலா என தான் இயக்கிய படங்களில் ஒரு தலைசார்பான சாதியத்தை திணித்திருந்தார் பா.ரஞ்சித். தான் சார்ந்த சாதியின் நிறமாக நீலம் கலரை வைத்து நீலம் புரடெக்சன் என்கிற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தனது தயாரிப்பு மூலம் சாதியம் கலந்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களையும் தனக்கு கீழ் உதவியாளராக பணியாற்றியவர்களை இயக்க வைத்து சாதிய் படங்களை வெளியிட்டார் இயக்குநரான பா.ரஞ்சித்.

 

ஆகவே அடுத்தடுத்து வரும் படங்களிலும் சாதியக் குறியீடுகளை திணிக்கும் வகையில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இவர் இயக்கிய மற்றும் தயாரித்த படங்களில் ஹீரோக்கள் உயர்சாதி பெண்களை துரத்தி துரத்தி காதலிப்பதை போல கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தப்பெண்களின் பெற்றோர்களும், குடும்பமும், ஹீரோயின் சார்ந்த சாதியினர் காதலுக்கு எதிரிகளை போலவ உருவகப்படுத்திய காட்சிகள் இடம்பெறாத படங்களே இல்லை எனக் கூறுகிறார்கள் சினிமா துறையினர். 

அதாவது நாடகக் காதல் என வடமாவட்டங்களில் நடப்பதாக கூறப்படும் கலாச்சாரத்தை ரஞ்சித் படங்கள் ஊக்குவித்து இளைஞர் பட்டாளத்தை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

 

இந்நிலையில் வடமாவட்டங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சாதி பெண்களை குறி வைத்து பா.ரஞ்சித் படங்களை இயக்கி வருவதாக பழைய வண்ணாரப்பேட்டை  பட இயக்குநர் மோகன் குற்றம்சாடி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோகன் நாடகக் காதலால் பெண்களின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை மையமாக வைத்து திரெளபதி என்கிற டைட்டிலில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் இது குறித்து இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’திருவள்ளூர், வடசென்னை, திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற ஊர்களில் எல்லாம் உள்ள சமூகங்களின் பெண்களை காதலிப்பது போல காட்டியாச்சி.. எப்ப சார் மயிலாப்பூர் பக்கம் மதுரை பக்கம் உள்ள சமூகத்தின் பெண்களை கதாநாயகியாக காட்டி காதல் பண்ணுவீங்க @beemji ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’’எனப்பதிவிட்டு உள்ளார். 

 

தனது அடுத்த பதிவில், ‘’உலகதரமான கதையம்சமும், தினக்கூலிகளின் வலிகளை சொல்லும் படத்தில் கூட பெண்ணை மாற்று சமுதாயத்தில் பிறந்த அன்பானவளாக காட்டி அவர்களின் மொத்த குடும்பத்தையே மிருகத்தனமாக காட்டும் அந்த எண்ணம் இருக்கே.. அதான் சார் சமூகநீதி.. அந்த காகித கொக்கு காட்சிக்காக படத்தை பார்க்கலாம்’’எனவும் பகடி செய்துள்ளார் இயக்குநர் மோகன்.

இந்தப்பதிவுகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளை இந்தப்பதிவு சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.