கடந்த இரு தினங்களாகவே இளையராஜாவின் 76 வது பிறந்த நாளை வளைத்து வளைத்துக் கொண்டாடி வரும் செய்தி ஊடகங்களில் ராஜா பிறந்த அதே ஜுன் 2ல் பிறந்தவர் என்பதையும் அவருக்கு இன்று 62 வது பிறந்தநாள் என்பதையும் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டன.

1956, ஜூன் 2ல் பிறந்த மணிரத்னம் இதுவரை கன்னடம்,மலையாளம், இந்தி, தமிழ் மொழிகளில் மொத்தம் 26  படங்கள் இயக்கியியிருக்கிறார். அவரது முதல் கன்னடப்படம் ‘பல்லவி அனு பல்லவி’ 1983ல் வெளியானது. இசை இளையராஜா. அவரது இரண்டாவது படம் ‘உணரு’ மலையாளம், அடுத்த ஆண்டான 1984ல் வெளிவந்தது. இப்படத்துக்கும் இசை இளையராஜா. அடுத்து தமிழில் அவர் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ துவங்கி 91ல் வெளியான ‘தளபதி’ வரை சரியாக 10 படங்களுக்கு தொடர்ச்சியாக ராஜாவுடன் பணிபுரிந்த மணிரத்னம், நான் பெரிய ஆளா நீ பெரிய ஆளா என்ற ஈகோவுடன் ராஜாவின் இசையை விட்டு வெளியேறி ‘ரோஜா’வில் ரஹ்மானுடன் கைகோர்த்தார்.

மணிரத்னத்துடன் 10 படங்கள் என்பது ராஜாவைப் பொறுத்தவரையில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவிதத்துக்கும் கீழ்தான். ராஜாவை விட்டு வெளியேறி ரஹ்மானுடன் இணைந்தபிறகு மணிரத்னத்துக்கு ஒரு நாயகனோ, மவுனராகமோ, தளபதியோ அமையவில்லை. யார் பெரிய ஆள் என்ற கேள்விக்கு பதில் வேண்டுவோர் இன்று காலை 6 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவில் ராஜாவை வாழ்த்தக் காத்திருந்த கூட்டத்தைப் பார்த்துதான் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனாலும் மணிரத்னம்... பாரதிராஜா, பாக்யராஜ்களைப் போல் அவுட் டேட்டட் ஆகிவிடாமல் தாக்குப்பிடித்து வருகிறார். அதனால் ராஜாவின் பழைய ரோஜாவான மணிரத்னத்துக்கும் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லியே தீரவேண்டும்.