பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த  சத்யராஜ் திடீரென அப்படத்தில் இருந்து  விலகியுள்ளார்.  படத்தில் நடிக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லாததால் அவர்  விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத் தயாரிப்பில், உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யாராய், கீர்த்தி சுரேஷ், அமலாபால், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இவர்களுடன் நடிகர் சத்யராஜும் இணைந்து நடிக்க  இருந்தார். பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைக் காவியம் என்பதால் அதைத்தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் அதில் வரும் முக்கியக் கதாபாத்திரமான பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் சத்யராஜ்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டிருந்தது. ஏற்கனவே பாகுபலி திரைப்படத்தில் சத்தியராஜ்  நடித்த கட்டப்பா கதாபாத்திரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்த நிலையில்.

 

மீண்டும் பொன்னியில் செல்வன் படத்தில்  பழுவேட்டரையராக கலக்கப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திடீரென அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். அதற்குக் காரணம் படத்திற்காகப்  போடப்பட்ட ஒப்பந்தத்தில் இத்திரைப்படம் தாய்லாந்தில் படமாக உள்ளதால் ஆறு மாத காலம் தாய்லாந்திலேயே தங்கி இருக்க வேண்டும்,  படப்பிடிப்பு நடக்கும் வேலையில்  அவசர வேலையாக வெளியூர்களுக்கு செல்லக்கூடாது.  படம் நிறைவடையும் வரை படப்பிடிப்புத் தளத்தில் தான் இருக்க வேண்டும் என்பதுடன், படத்தில் ஒப்பந்தம் ஆகும் நாள்முதல் வேறு எந்த படத்திற்கும் கால்ஷீட் ஒதுக்க கூடாது என பல்வேறு நிபர்ந்தனைகள்  விதிக்கப்பட்டிருந்தது. எனவே அந்த நிபர்ந்தனைகளை ஏற்க மறுத்த சத்யராஜ் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்