எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்து, திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் இயக்குனராகவும் உயர்ந்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன்.

முத்தான திரைப்படங்களை இவர் தமிழ் திரையுலகிற்கு கொடுத்த போதிலும் 12 படங்களை மட்டுமே இயக்கினார். மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் மாஸ் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக, இவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து  மகேந்திரன் குறித்து அவருடைய மகன் ஜான் மகேந்திரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Dir.JohnMahendran@johnroshan

Pray for APPA
1,822
5:02 PM - Mar 27, 2019

இதில் 'அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் மகேந்திரன் உடல்நலம் மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து  ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.