முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' உள்ளிட்ட அற்புதமான படங்களை இயக்கியவர்,  இயக்குனர் மகேந்திரன். தற்போது இவர்  உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்து, திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் இயக்குனராகவும் உயர்ந்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன்.

முத்தான திரைப்படங்களை இவர் தமிழ் திரையுலகிற்கு கொடுத்த போதிலும் 12 படங்களை மட்டுமே இயக்கினார். மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் மாஸ் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக, இவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.