டெல்லிக்கு போன விஜய் 64 படக்குழு இன்னும் அங்கேதான் இருக்கிறது. மளமளவென சுருட்டித் தள்ளுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தினந்தோறும் விஜய்யிடம் பேசி வரும் அவர், கைதி ஹாலிவுட் படத்தின் தழுவல் என்கிற பேச்சுக்கும் விளக்கம் அளித்தாராம். அதை ஏற்றுக் கொண்ட விஜய் ’’நான் உங்களை முழுசா நம்புறேன். சந்தோஷமா வேலையை பாருங்க’’என்று கூறியிருப்பதாக தகவல். இதற்கிடையில் எல்லா பட ஷுட்டிங்கையும் தள்ளி வைத்துவிட்டு இதில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

‘விளம்பரங்களில் என் பெயருக்கு ஈக்குவலா விஜய் சேதுபதி பெயரும் வரணும். கவனக்குறைவா கூட விட்றாதீங்க’என்று கூறியிருக்கிறாராம் ஹீரோ விஜய். ‘பேட்ட’ படத்தில் தனது கேரக்டர் டம்மியாக்கப் பட்டதை கண்டு ஃபீல் ஆகியிருந்த சேதுவுக்கு விஜய்யின் இத்த உத்தரவு நிஜமாகவே இன்ப அதிர்ச்சிதான்!  லோகேஷ் கனகராஜ் போல ஒரு இயக்குனர் இருந்தால் போதும். சினிமா பிழைத்துக் கொள்ளும். படப்பிடிப்பில் அதிக செலவு வைக்காத இயக்குனர் என்கிற பெயரை இரண்டே படங்களில் எடுத்துவிட்டார் அவர்.

இப்பவும் விஜய் 64 படப்பிடிப்பில் சிக்கனத்தை காண்பித்து சிதற விடுகிறாராம். இப்படத்தின் போட்டோ ஷுட்டிங் சில வாரங்களுக்கு முன் நடந்தது. ஆபிசிலேயே வைத்து கம்பெனி போட்டோ கிராபர் உதவியுடன் சிம்பிளாக எடுத்து முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய் மாதிரி டாப் ஹீரோக்கள் நடிக்கிற படங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது. போட்டோ ஷுட்டிங்குக்கே பல லட்சங்களை ஸ்வாகா செய்துவிடுவார்கள்.

இந்த எளிமை ரொம்பவே கவர்ந்ததாம் விஜய்யை. ‘செலவே இல்லாம முடிச்சுட்டீங்களே’என்று டைரக்டரின் தோளில் தட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த பாராட்டுகள் காம்பினேஷனை தொடர வைத்தாலும் ஆச்சர்யமில்லை.