Asianet News TamilAsianet News Tamil

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை உறுதி... மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் அதிரடி!!

செக் மோசடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறையை எதிர்த்து தொடரப்பட்ட இயக்குநர் லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை உறுதியாகியுள்ளது.

director lingusamy sentenced to 6 months in jail in check fraud case and chennai court confirms it
Author
First Published Apr 13, 2023, 12:06 AM IST | Last Updated Apr 13, 2023, 12:06 AM IST

செக் மோசடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறையை எதிர்த்து தொடரப்பட்ட இயக்குநர் லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை உறுதியாகியுள்ளது. முன்னதாக இயக்குநர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதை அடுத்து 2014 ஆம் லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் படமும் 2015 ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல் நடித்து வெளியான உத்தம வில்லன் படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இதையும் படிங்க: தலைவி வேற ரகம் போலயே... இதுவரை நயன் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியங்களை உடைத்த சரண்யா பொன்வண்ணன்!

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே 2014 ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தது. அந்த கடனை உரிய நேரத்தில் செலுத்தாததால் லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் லிங்குசாமி சம்பந்தப்பட்ட தொகைக்கு காசோலைகள் வழங்கினார். ஆனால் அவை வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதனையடுத்து லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்டது.

இதையும் படிங்க: சென்னைன்னாலே செலிபிரிட்டி இல்லாமலா; எல்லோ டிரெசில் சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த சதீஷ், த்ரிஷா!

இந்த வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டுமென்ற உத்தரவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios