நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் என தல அஜித்திற்கு 2019ம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. இதையடுத்து மறுபடியும் சிறுத்தை சிவாவுடனே டிராவல் செய்யலாம் என அஜித் நினைத்து கொண்டிருந்த வேலையில் தான்,  அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தலைவர் 168 படத்தை இயக்க கமிட்டாகிவிட்டார். உடனே சற்றும் யோசிக்காமல் நேர்கொண்ட பார்வை வெற்றி கூட்டணியுடன் மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார். 

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் கலக்க உள்ளதால், தல ரசிகர்கள் மரண வெயிட்டிங். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள அஜித் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், தனக்கு டுவிட்டரில் கணக்கே இல்லை என்றும், யாரோ தனது பெயரில் போலி கணக்கை தொடங்கி, அஜித் படத்தை இயக்க உள்ளதாக வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். என்ன சார் தல ஃபேன்ஸ் ஆசையை இப்படி நிராசையாக்கிவிட்டீர்களே....!