karhisuburaj birthday

குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இருந்து நேராக இயக்குனர் ஆகலாம் என்ற டிரெண்டை கொண்டு வந்தவர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா' மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கதை சொல்லும் விதம், வித்தியாசமாக அமைக்கப்பட்ட காட்சிகள், கடைசி வரை யூகிக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்ற சஸ்பென்ஸ், விஜய்சேதிபதியின் அபாரமான நடிப்பு ஆகியவை பீட்சா படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது.

இதன்பின்னர் இவர் இயக்கிய இரண்டாவது படமான 'ஜிகர்தண்டா' படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியே இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார் என்பது தெரிந்ததே. 

பாபிசிம்ஹா நடித்த வில்லன் கேரக்டரை தனக்கு முன்பே சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியதில் இருந்தே அந்த கேரக்டர் எந்த அளவுக்கு சிறப்பாக அமைந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கேரக்டரில் நடித்த பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மூன்றாவது படமான 'இறைவி' படமும் அவரது பாணியிலே இருந்தாலும் இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனாலும் பெண்களின் தைரியத்தை சிறப்பாக வெளிப்படுத்திய படம்.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது. இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்துவரும் கார்த்தி சுப்புராஜ்க்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் .