Asianet News TamilAsianet News Tamil

’பழைய சூர்யா இல்லை...அவர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆளே மாறிவிட்டார்’...’காப்பான்’கே.வி.ஆனந்த் அதிர்ச்சி...

’நடிகர் சூர்யாவுக்கு வரவர சமூக அக்கறை அதிகமாகிக்கொண்டே போகிறது. பெண்களைக் கிண்டலடிக்கும் அடிக்கும் வசனங்களைப் பேச மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.ஒரு இயக்குநராக அவரை சமாதானப்படுத்தி அப்படிப் பேச வைப்பதற்குள் பெரும்பாடுபடவேண்டியிருக்கிறது’என்கிறார் ‘காப்பான்’பட இயக்குநர் கே.வி.ஆனந்த்.
 

director k.v.anand speaks about his kaappaan hero surya
Author
Chennai, First Published Aug 26, 2019, 11:01 AM IST

’நடிகர் சூர்யாவுக்கு வரவர சமூக அக்கறை அதிகமாகிக்கொண்டே போகிறது. பெண்களைக் கிண்டலடிக்கும் அடிக்கும் வசனங்களைப் பேச மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.ஒரு இயக்குநராக அவரை சமாதானப்படுத்தி அப்படிப் பேச வைப்பதற்குள் பெரும்பாடுபடவேண்டியிருக்கிறது’என்கிறார் ‘காப்பான்’பட இயக்குநர் கே.வி.ஆனந்த்.director k.v.anand speaks about his kaappaan hero surya

ஏற்கனவே சூர்யாவை வைத்து ‘அயன்’,’மாற்றான்’படங்களை இயக்கியுள்ள கே.வி. ஆனந்த் தற்போது மூன்றாவது படமாக ‘காப்பான்’படத்தை இயக்கி முடித்துள்ளார் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ள இப்படம் குறித்துப் பேட்டி அளித்த ஆனந்த்,”காப்பான் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானதுதான். நமது தேசியப் பாதுகாப்புப் படையின் அங்கமான சிறப்புப் பாதுகாப்புக் குழுவைப் பற்றிய ஆராய்ச்சியின் போது திரட்டப்பட்ட தகவல்கள், கதைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. இதை வைத்து ஏன் படம் எடுக்கக்கூடாது? என்று நினைத்தேன்.பிரதமருக்குப் பக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்குபவர்கள் இவர்கள். குண்டடிபட சம்பளம் பெறுபவர்கள். இவர்களுக்குள் ஒரு ஒற்றன் இருந்து, அவன் பிரதமரைக் கொல்ல நினைத்தால் என்ன ஆகும்? என்பதுதான் படத்தின் கரு.

கற்பனையான ஒரு பிரதமர் கதாபாத்திரம் இருக்கும் ஒரு கற்பனைப் படம் தான் இது. சில நிஜ சம்பவங்களை உங்களுக்கு இந்தப் படம் ஞாபகப்படுத்தலாம். ஆனால் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை. அப்படி ஒரு குறிப்பிட்ட கட்சியைத் தாக்கி படம் எடுப்பதில் சூர்யாவுக்கும் எனக்கும் உடன்பாடு இல்லை.director k.v.anand speaks about his kaappaan hero surya

சூர்யா இப்போது முன்பை விட  அதிக சமூக உணர்வுடன் இருக்கிறார். மேலும் சரியான விஷயங்களைச் சொல்வது குறித்து தற்போது வற்புறுத்துகிறார். பெண்களைக் கிண்டல் செய்யும் ஒரு வசனம் இருந்தால் அதைப் பேசத் தயங்குகிறார். சில காட்சிகள் அவரை அசவுகரியமாக்கின. இது சூர்யா அல்ல, அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என நான் அவரைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. ‘அயன்’படத்தில் பார்த்த சூர்யா இப்போது ஒட்டுமொத்தமாக ஆளே மாறியிருக்கிறார்’என்கிறார் கே.வி.ஆனந்த்.படத்தை இண்ட்ரஸ்டிங்கா எடுக்குறீங்களோ இல்லையோ இந்த மாதிரி கதைகளை நல்லா அவுத்து வுடுறீங்க டைரக்டர்ஸ் சார்ஸ்...

Follow Us:
Download App:
  • android
  • ios