பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தவறு அந்த இளைஞர்கள் மீது மட்டுமல்ல,  பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதும் இருக்கிறது என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.  அவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கு என்றால் பொள்ளாச்சி சம்பவமாகத்தான் இருக்கும். 

எப்பொழுதும்  சாப்டானவர்கள் என்று பெயர் எடுத்த  கொங்கு  மண்டலத்துக்காரர்களுக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். இச்சம்பவம் குறித்து தமிழகமே தனது கண்டனத்தை பதிவுசெய்து வரும் நிலையில்,  இதுகுறித்து பாக்யராஜ்  தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள "கருத்துக்களை பதிவு செய்"  என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டனர் என்றார்.  தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தில் தம்மை பொருத்தவரையில்  இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை. அதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது என்றுதான் நான் சொல்லுவேன்.  இவ்வாறு பாக்யராஜ் அதில் பேசியுள்ளார்.