தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுக்க பல்வேறு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் கைது செய்யபட்டவர் இயக்குனர் கௌதமன்.

மேலும் சமீப காலமாக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதில் 32 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக சமீபத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று போராட்டாம் நடத்திய அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன் என சொல்லியிருந்த அவர்  தற்போது மீண்டும் சென்னை, கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்கு வரத்து நெரிசலும் அதிகரித்தது. போராட்டத்தை கைவிட மறுத்தநிலையில் அவரையும், இளைஞர்களையும் காவல் துறை கைது செய்தனர்.

தற்போது போது இடத்தில், போது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.