Asianet News TamilAsianet News Tamil

’அவரை வைத்துப் படம் தயாரித்தவர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள்’...தனுஷை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்...

’ஒரு படம் துவங்கப்படும் முன்பே அட்வான்ஸ் என்ற பெயரில் பெரும் தொகையைக் கதாநாயகர்கள்  வாங்கிவிடுவதால் பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கி விடுகின்றன’என்று தனுஷை மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
 

director goutham menon attacks his hero dhanush
Author
Chennai, First Published Sep 3, 2019, 11:45 AM IST

’ஒரு படம் துவங்கப்படும் முன்பே அட்வான்ஸ் என்ற பெயரில் பெரும் தொகையைக் கதாநாயகர்கள்  வாங்கிவிடுவதால் பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கி விடுகின்றன’என்று தனுஷை மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.director goutham menon attacks his hero dhanush

சுமார் மூன்று வருடப்போராட்டங்களுக்குப் பின்னர் வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கிறது கவுதம் மேனன், தனுஷ் கூட்டணியின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’. இப்படம் தாமதமானது குறித்து ஆங்கில இணையம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் கவுதம், தனுஷ் உள்ளிட்ட தமிழ்ப்பட கதாநாயகர்களை ஒரு விளாசு விளாசியிருக்கிறார். அதில், ‘தமிழ்ப்பட நாயகர்கள் மிக அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. அதிலும் படம் துவங்குவதற்கு முன்பே அட்வான்ஸ் என்ற பெயரில் பெரும் தொகையை தயாரிப்பாளரிடமிருந்து கறந்துவிடுகிறார்கள். அதே படம் ரிலீஸாக முடியாமல் தத்தளிக்கிறபோது அவர்கள் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த படங்களுக்கு நடிக்கப்போய்விடுகிறார்கள்’என்று தனுஷை தாக்கியிருக்கிறார்.

இதே தனுஷ் தனக்கு ஒழுங்காக சம்பள பாக்கியை செட்டில் பண்ணாத ‘என்னை நோக்கிப்பாயும் தோட்டா’படத் தயாரிப்பாளரை மறைமுகமாகத்தாக்கிஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.இது தற்போது பெரும்  சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பதிலளித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறும்போது, “விஜய், அஜித்குமார் போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவுகிறார்கள். தனுசால் யாரும் லாபம் அடையவில்லை. துள்ளுவதோ இளமை தொடங்கி வடசென்னை வரை தனுசை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்போது சினிமா துறையில் இல்லை” என்றார்.director goutham menon attacks his hero dhanush

மற்றொரு தயாரிப்பாளரான கே.ராஜன் கூறுகையில்,“தனுசை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர். கடன் வாங்கித்தான் பட அதிபர்கள் படம் எடுக்கின்றனர். கதாநாயகன் மற்றும் டைரக்டர் செய்யும் தவறுகளால் படப்பிடிப்பு காலதாமதமாகி வட்டி அதிமாகி விடுகிறது. ரூ.10 கோடிக்கு எடுத்த படத்தை ரூ.8 கோடிக்குத்தான் விற்க முடிகிறது. இதனால் வீடு சொத்துகளை இழந்து நிற்கிறார்கள்.ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஆடம்பர கார்களில் வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று சில நடிகர்கள் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமடைந்த நிலைமையும் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதை தனுஷ் நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.மேலும் சில தயாரிப்பாளர்கள் தனுசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios