director got married with actress dona

படம் வெளியாகும் முன்பே கதாநாயகியை மனைவியாக்கிய பிரபல இயக்குனர்..!

பொதுவாகவே படத்தின் இயக்கும் இயக்குனர், அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி மீது காதல் கொண்டு கரம் பிடிப்பது சாதாரணமாக நடைப்பெரும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் காதல் கொண்ட கதாநாயகி வேறு சில படங்களில் நடித்த பிறகு,பொறுமையாக காதல் திருமணம் செய்யும் ஜோடிகள் ஏராளம்..

அதில் சின்ன மாற்றமாக அமைந்துள்ளது தான் இந்த திருமணம்..யார் யாரை திருமணம் செய்து உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதா..?

ஆம்... வாங்க பார்க்கலாம்...

"பேய் எல்லாம் பாவம்" என்ற திரைப்படத்தின் இயக்குனர் தீபக் நாராயணன்

இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்து உள்ளார் ...பின்னர் தற்போது தமிழில் ஒரு வித்தியாசமான கதை களத்துடன் களம் இறங்கி உள்ளார்.இது முழுக்க பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நாயகியாக நடிப்பது டோனா ஷங்கர் என்பவர்.இது குறித்து இயக்குனர் தீபக் தெரிவிக்கும் போது,

"காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது...டோனா என்னுடைய படம் மட்டும் அல்லாமல் டிவி தொடரிலும் நடித்து வருகிறார்...அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பார் என தெரிவித்து உள்ளார்

புதுமண தம்பதிகளுக்கு திரைத்துறையினர் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.