தல அஜித்துக்கு, கோலிவுட் திரையுலகில் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அஜித்தின் படம் குறித்து எந்த தகவல் வெளிவந்தாலும், அதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவார்கள்.

அதே போல் அஜித்தின் பிறந்த நாள், மற்றும் அவருடைய பிள்ளைகளுக்கு பிறந்த நாள் வந்தால் கூட, அன்றய தினம் ஆதரவற்றோர் மற்றும் பள்ளி மாணவர்கள் என பலருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இவருடைய தீவிர ரசிகரும்,  பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன், தல அஜித் பல கெட்டப்புகளில் நடித்து, கடந்த 18 ஆடுகளுக்கு முன் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'சிட்டிசன்' படத்தில் இடம்பெறும் 'நான் தனி ஆள் இல்ல' என்கிற வசனத்தை எத்தனை முறை கேட்டாலும், புல்லரிக்கும் என்றும், இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

இந்த ட்விட்டருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது, அஜித் நடித்து வரும் பிங்க் ரீமேக்கான, 'நேர்கொண்ட பார்வை' படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.