’அடுத்த பட வாய்ப்பு இல்லாம சும்மா இருக்கீங்களா சார். எப்பப் பாத்தாலும் ஆன் லைன்லயே பிசியா இருக்கீங்க?’ என்று கலாய்த்த ட்விட்டர் பெண்மணிக்கு காட்டமாய் பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

2005ல் வெளிவந்த ‘தவமாய் தவமிருந்து’ படத்துக்குப் பிறகு சேரனின் சினிமா வாழ்க்கை அவ்வளவு சிறப்பாய் இல்லை. அடுத்து அவர் இயக்கிய, நடித்த படங்கள் அத்தனையும் ஆவரேஜ் அல்லது அதற்கும் கீழே என்று ஆகிவிட்ட நிலையில் கடைசியாய் அவர் இயக்கி நடித்த ‘திருமணம்’ படமும் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.

இதனால் இன்றைய ட்ரெண்டிங்கில் அவர் மிகவும் பின் தங்கி இருப்பதாக கமெண்டுகள் வந்தன. அதைச் சரிக்கட்டும் நோக்கில் மெல்ல வலைதளங்கள் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்த அவர் சமீப காலமாக ட்விட்டர் பக்கத்தில் அதிக நேரம் செலவிடத் துவங்கினார். அதைக் கிண்டல் செய்யும் விதததில் மதுபாரதி என்ற பெண்மணியோ அல்லது ஃபேக் ஐடியோ,...’அடுத்த பட வாய்ப்பு இல்லாம சும்மா இருக்கீங்களா சார். எப்பப் பாத்தாலும் ஆன் லைன்லயே பிசியா இருக்கீங்க?’என்று கிண்டலடித்திருந்தார்.

அதைப்படித்துக் கடுப்பான சேரன் ...நானாவது 11படம் டைரக்ட் பண்ணி 15படம் நடிச்சு 5படம் தயாரிச்சு 4நேசனல் அவார்ட வாங்கி வீட்டு செல்ப்ல வச்சுட்டு ரிலாக்ஸா இன்றைய தலைமுறைய கவனிக்க கத்துக்க அப்பப்போ ஆன்லைன்ல இருக்கேன்.நீ என்னம்மா பன்றே உழைச்சு அப்பா அம்மாவ காப்பாத்துற வயசுல போன நோண்டிகிட்டு... நீதான்மா என் அடுத்த படம்’ என்று பதில் போடவே அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்டுகள் குவிந்துவருகின்றன. சினிமாவுலதான் சார் நீங்க ஃப்ளாப். ட்விட்டர் நீங்க இப்ப ஹிட்டு சேரன் சார்.