குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக்களம் இருந்தபோதும் படம் மிகப் பழைய்ய பாணியில் இருந்ததால் தியேட்டர்களிலிருந்து அப்படம் வெளியான முதல்வாரத்திலேயே எண்ட் கார்டு போடப்பட்டது.

முதல் முறை ரிலீஸானபோது வசூலில் படுதோல்வி அடைந்த தனது ‘திருமணம்’ படத்தை மீண்டும் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்து அப்படத்திற்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக்களம் இருந்தபோதும் படம் மிகப் பழைய்ய பாணியில் இருந்ததால் தியேட்டர்களிலிருந்து அப்படம் வெளியான முதல்வாரத்திலேயே எண்ட் கார்டு போடப்பட்டது.

 ஆனாலும் அந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சேரன் மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருந்ததாகவும் , திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை என்றும் தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார். வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் ’திருமணம்’ படத்துக்கு மறுமணம் நடைபெறவிருக்கிறது.