Director cheran protest against to vishal

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.கே,நகர் தொகுதியில் விஷால் போட்டியிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகளை அவர் தீர்த்து வைக்காததால் தங்களை அவர் தற்கொலைக்கு தூண்டுவதாகவுஙம் இயங்ககுநர் சேரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா? என சேரன் கேள்வி எழுப்பினார்.

விஷால் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும் என்றும் அவர் ராஜினாமா செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்த சேரன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் ராஜினாமா செய்யாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

விஷால் தேர்தலில் நிற்பதால் அரசியல்வாதிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் தயாரிப்பாளர்களை தற்பொலைக்கு தூண்டுவதாகவும் வேரன் ஆவேசமாக தெரிவித்தார்.