ஆரம்பத்தில் சேரன், சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்து, கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை ஆகிய படங்களில் பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து 'மகாநதி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின் உதவி இயக்குனர் என்பதை தாண்டி, முதல் படமான 'பாரதி கண்ணம்மா' படத்தில், இயக்குனராக மாறினார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை  தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடி கட்டு போன்ற சமூக அவலங்களை சித்தரித்த படங்களை எடுத்தார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இவருடைய இயக்கத்தில் வெளியான 'ஆட்டோகிராப்' திரைப்படம் தான் இவர் இயக்கத்தில் வெளியாகி, கடைசியாக வெற்றி பெற்ற  படம் என கூறி, கண்கலங்கியவாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார். 

இந்நிலையில் இவர் உதவி இயக்குனராக, கே.எஸ்.ரவிகுமாருடன் பணியாற்றிய போது, எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் இதோ...