இன்று தனது 54வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் சேரன், நீண்ட இடைவெளிக்குப்பின் தான் இயக்கிவரும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ‘திருமணம்’ என்னும் படப்பெயரை இன்று காலை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

2015 ல் இயக்கிய ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்துக்குப் பின் இயக்குநர் சேரன், அடுத்த படம் இயக்க வாய்ப்பின்றி நீண்ட ஓய்விலிருந்தார். சேரன் எனும் இயக்குநரின் வாழ்க்கையில் ‘இடைவேளை’ போட்ட படம் அதுதான். அதன்பின்னர் ‘சிஹெச் 2 போன்ற சிக்கல்களில் மாட்டிய சேரன், திரைப்பட பூஜை மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று தனது சினிமா வாழ்க்கையின் செகண்ட் ஹாஃபாக, ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] என்ற தனது புதிய பட அறிவிப்பை சேரன் வெளியிட்டார். இப்படத்தின் நாயகனாக நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நான்கு ஆண்டுகால ரெஸ்டுக்குப் பிறகு படம் இயக்க வந்திருப்பதால் தன்னுடைய பெஸ்ட் படமாக ‘திருமணம்’ படத்தை தந்தே ஆகவேண்டிய கட்டாயத்திலிருக்கும் சேரன் இப்படத்தில் நடிக்கவில்லை.