சென்சார் திரையிடலுக்கும் மற்ற சில பிரிவியூக்களுக்கும் லட்சக்கணக்கில் செலவழித்து நொந்துபோயிருந்த தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் செய்தியாக இன்று முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் தணிக்கை காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கட்டணம் ரத்து என பாரதி ராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததை அடுத்து சங்கத்தைக் கைப்பற்றிய தமிழக அரசு சமீபத்தில்  தனி அதிகாரி நியமனம் செய்தது அந்த அதிகாரிக்கு ஆலோசனை வழங்க இயக்குனர் பாரதிராஜா டிஜி தியாகராஜன் எஸ் வி சேகர் டி சிவா சிவசக்தி பாண்டியன் ஜேஎஸ்கே சதீஷ்குமார் உள்பட 7 பேர் அடங்கிய ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாரதிராஜா உள்பட 7 பேர் அடங்கிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதில்
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு கடந்த 23 6 2019 அன்று கியூப் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில்  29 6 2019 முதல் தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கட்டணம் இல்லை. மேலும் காட்சி தேவைப்படும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கை டியூபில் கொடுத்து தங்களது திரைப்படத்தின் டி சி பி ஐ காப்பி  செய்து வாழ்நாள் முழுக்க  இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.இதே போல்  ஜூலை 12 முதல் திரையரங்குகளில் திரையிடப் படும் ஒரு நிமிட ட்ரெய்லருக்கும் கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சில லட்சங்கள் மிச்சமாகும்.