பல இசை ரசிகர்கள் மனதை, தன்னுடைய ஈடு இணையில்லா... பாடங்கள் மூலம் கட்டி போட்டவர் இளையராஜா. இசை கடவுள் என்றும் பலரால் போற்ற பட்டு வருகிறார். பல இசையமைப்பாளர்கள் தோன்றினாலும் இளையராஜாவின் பாடல்கள் இன்றய இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தவை.

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இளையராஜாவின் ரிக்கார்டிங் தியேட்டர் இயக்கி வருகிறது. அங்கு தான் அவர் தான் இசையமைக்கும் அனைத்து படங்களுக்கும், இசை கோர்ப்பு பணி நடக்கும்.

இளையராஜாவின் இசை திறமையை கௌரவிக்கும் விதமாக, பிரசாத் ஸ்டுடியோவில் இடம் வழங்கியவர் எல்.வி.பிரசாத். இந்நிலையில் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகளுக்கும் இளையராஜாவிற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட, இளையராஜாவின் ரிகார்டிங் தியேட்டரை காலி செய்ய சொல்லிவிட்டு அந்த ஸ்டூடியோவை வேறு பணிகளுக்கு பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால், இளையராஜாவின் இசை பணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

இதனால், திரையுலகினர் அனைவரும் ஒன்று திரண்டு, இளையராஜாவின் காலம் உள்ள வரை, அவர் அங்கு தான் இசை பணிகளை தொடர வேண்டும் என்று பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரை வலியுறுத்த ஒன்று சேரவேண்டும் என இயக்குனர் பாரதி ராஜா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இளையராஜாக்வுகும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019(வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.