அந்த பரபரப்பை கோலிவுட் மட்டுமல்ல தென்னிந்திய சினிமா உலகமே நிச்சயம் மறந்திருக்காது. அது...இயக்குநர் பாலா தனது ட்ரீம் ப்ராஜெக்டான ‘நான் கடவுள்’ படத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயன்று, அஜித்தும் தயாராகி பின் ஏதோ ஒரு காரணத்தினால் அவர் விலக முயன்ற போது கடுப்பான பாலா ஒரு பெரிய புள்ளியின் உதவியுடன் அஜித்தை ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக எழுந்த பரபரப்பு அது. 

இது உண்மையா பொய்யா என்று இதுவரையில் அஜித்தும் சொல்லவில்லை, பாலாவும் மறுக்கவில்லை. ஆனால் இந்த  தாறுமாறு தகராறு மட்டும் அடிக்கடி ஓடிக் கொண்டே இருக்கும் சினிமா ரசிகர் உலகில். நான் கடவுள் படம் ஆர்யாவின் நடிப்பில் வெளியாகி கவனிக்கத் தக்க வகையில் ஹிட் அடித்ததோடு... இளையராஜா, பாலா, ஆர்யா, பூஜா என அந்த ப்ராஜெக்டின் முக்கியப் புள்ளிகளில் துவங்கி மொட்டை ராஜேந்திரன் வரை பலரையும் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாட வைத்தது. 

அந்தப் படத்தில் நடிக்காதது அஜித்துக்கு வருத்தமோ அல்லது மகிழ்ச்சியோ தெரியாது. ஆனால் அதன் பிறகு அவரது ரூட்டும் தெளிவாக போய்க் கொண்டிருந்ததோடு சமீபத்தில் ‘விஸ்வாசம்’ எனும் மரணமாஸ் ஹிட்டையும் கொடுத்தார். இதன் மூலம் இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் மாஸ் மட்டுமல்ல கலெக்‌ஷன் ஏரியாவிலும் அஜித்தான் நம்பர் 1! எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. விஸ்வாசத்தோடு மல்லுக்கு நின்ன சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படம் சற்றே பின் வாங்கியதிலிருந்து அஜித்தின் கொடி தமிழக கோட்டையில் பட்டொளி வீசித்தான் பறக்கிறது. 

விஸ்வாசம் வெற்றியால் அஜித்தின் ரசிகர்கள் தாறுமாறான சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அம்மாம் பெரிய சூப்பர்ஸ்டார் ரஜினியையே ‘என்னா?’ என்று கேட்பவர்கள், பாலாவை எல்லாம் விட்டா வைப்பார்கள்...அன்று தங்கள் தல-யை டார்ச்சர் செய்தார் என்று பெயரெடுத்த பாலாவின் இமேஜூக்கு இப்போது டைம் பார்த்து டைம்பாம் வைத்து காலி செய்கின்றனர் தல ரசிகர்கள். 

எப்படி தெரியுமா?... “பாலா பல மாசமா ஒக்காந்து ஒக்காந்து எடுத்த வர்மா படத்தை தயாரிப்பு நிறுவனம் ‘குப்பை’ன்னு சொல்லி ஒதுக்கி வெச்சிடுச்சு. படத்தோட டைட்டிலே ‘வர்மா’ன்னு டவுட்டா, அதாவது  இந்தப்படம் ‘வருமா’?ன்னு வெச்சதே மொத தப்பு. அதுக்கடுத்த தப்பு பாலாவையெல்லாம் இதுல இயக்குநராக்குனது. தமிழ்நாடிலேயே ஏன் இந்த இந்தியாவிலேயே ஒரு முக்கிய டைரக்டரோட படம் ரிலீஸுக்கு முன்னாடியே ‘சரியில்ல, சொதப்பல், குப்பை’ன்னு பேர் வாங்கிக் கொடுத்து கேவலப்படுத்திய அனுபவம் பாலாவுக்கு மட்டும்தான் கிடைச்சிருக்குது. அவரோட புத்திக்கெல்லாம் இந்த விருது ரொம்ப சாதாரணம். 

இதைவிட மோசமாவெல்லாம் இன்னும் அவர் விருது வாங்குவார். இனி அந்தாளுக்கு சினிமா துறையில் இறங்கோ இறங்கு முகம்தான். ஆண்டவன் மட்டுமில்ல, எங்க தல-யும் நின்னு கொல்வார். தன்னை டார்ச்சர் செய்த பாலாவை ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்து இதோ அந்தாளு மண்டையில நட்ட நடு உச்சியில டம்முன்னு வெச்சாரு பாருங்க ஆயிரம் டன் இடி.” என்று ஆன் லைனில் போட்டுப் பொளந்திருக்கிறார்கள். பாலாவுக்கு நேர்ந்த இந்த இக்கட்டை பற்றி அஜித்தே ஏதாவது மறைமுகமாக இடித்துப் பேசியிருந்தாலும் கூட அதை ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் அவருடைய ரசிகர்களெல்லாம் பாலாவை பேசுவதுதான் கொடுமை. ஹூம் எலிக்கு ஏப்பம் வந்தா எறும்பெல்லாம் சோடா குடிக்குமாம்!