Director Bala Direct Vikram Sun dhruv
தெலுங்கில் செம ஹிட்டடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக்க கோலிவுட்டில் செம போட்டி. இப்போது இந்தப் படத்தை தமிழில் செய்வது இயக்குநர் பாலா என்பது உறுதியாகியுள்ளது. ஹீரோ யார் தெரியுமா? சீயானின் மகன் துருவ். படத்தின் பெயர் ‘வர்மா’.
பாலாவின் ‘வர்மா’ என்று போடப்பட்ட இனிஷியல் லுக் மட்டும் வெளியாகி கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னிலை பெறுவதற்காக நெடுங்காலம் போராடி போராடி தோற்ற விக்ரமை, சேது மூலம் ஹாட் லிஸ்ட் ஹீரோக்களில் ஒருவராக்கியது பாலாதான்.
அந்த செண்டிமெண்டில்தான் தன் மகனின் முதல் படத்தையும் பாலா கையால் இயக்க வைக்கிறார் விக்ரம். பழைய செண்டிமெண்ட் இதிலும் ஒர்க் அவுட் ஆகுமா!? பார்ப்போம்.
எனிஹவ் வாழ்த்துக்கள் ஜூனியர் சீயான்!
