Director Bala and actress Jyothika is also a case ...

"நாச்சியார்" பட விவகாரத்தால் இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது கரூரில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

இந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்த நிலையில் ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்து கரூர் நீதிமன்றத்திலும் இதே விவகாரத்திற்காக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இந்த சர்ச்சைக்குரிய வசனத்தை பேசிய ஜோதிகா மீதும், இந்த படத்தை இயக்கிய பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.