காப்பி அடித்து அட்லீ படம் இயக்குவதாக வந்த புகாரை தொடர்ந்து தான் விஜய் - அட்லீ கூட்டணி முறிந்ததாக சொல்லப்படும் நிலையில் ஷாருக்கானுக்கு இந்த கருத்தை மனதில் கொண்டே  ஷாருக்கானுக்கு அட்லீ மீது முழு நம்பிக்கை வரவில்லை என தோன்றுகிறது.

அட்லீயின் முதல் பட வெற்றி :

அறிமுக இயக்குனராக இருந்த அட்லீயின் முதல் படமான ராஜா ராணி நல்ல வெற்றியை பெற்று தந்தது. ஆர்யா, நயன்தாரா என நட்சத்திர படமாக வெளியான இந்த படம் அட்லீக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. முன்னதாக அட்லீ இயக்குனர் ஷங்கரின் எந்திரன், நண்பன் ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர்.

விஜயின் பேவரட் இயக்குனர் : 

ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக முன்னணி ஹீரோவான விஜயை இயக்கம் வாய்ப்பை தட்டி தூக்கினார். இவர்கள் கூட்டணியில் ஒரு அல்ல அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்கள் வெளியாகின. இந்த படங்கள் ரசிக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முக்கிய செய்திகள்... Attlee beast dace with wife : வாவ்...விஜய் இயக்குனர் மனைவியுடன் போடும் ஆட்டத்தை பாருங்க...என்னம்மா பண்ணுறாங்க

ஷாரூக்கானுடன் கூட்டணி :

விஜய் படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த இயக்குனர் அட்லி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்திலும் ஷாரூக்கிற்கு ஜோடியாக தமக்கு மிகவும் பிடித்த நயன்தாராவையே நடிக்க ஒப்பந்தம் செய்தார் அட்லி. இந்த படத்திற்காக படக்குழு வெளிநாட்டிற்கு பறந்த நிலையில் ஷாருக்கானின் மகன் கைதாகவே மீண்டும் நாடு திரும்பிய ஷாருக்கான் படப்பிடிப்பு குறித்த முடிவிற்கு இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது.

காப்பி இயக்குனர் அட்லீ : 

இதற்கிடையே அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம் என பல கலவைகள் கலந்து மெர்சலைத் தந்திருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து மூன்று முகம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் ஃபிலிம் தயாரிப்பாளர் சங்கத்தில் பபுகார் அளிக்கவே. இது குறித்து அட்லீக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மற்ற படங்களையும் அட்லீ ஆங்கில படங்களிலிருந்து சுட்டதாகவே விமர்சங்கள் எழுந்தன. இது குறித்து ஷாருக்கானுக்கு அட்லீயை அழைத்து விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்... Director shankar son Arjith : பிகில் பார்ட் 2!: அதே அட்லி இயக்க, ஷங்கர் மகன் ஹீரோவா?

படப்பிடிப்புக்கு சம்மதம் தெரிவிக்காத ஷாருக் :

காப்பி அடித்து அட்லீ படம் இயக்குவதாக வந்த புகாரை தொடர்ந்து தான் விஜய் - அட்லீ கூட்டணி முறிந்ததாக சொல்லப்படும் நிலையில் ஷாருக்கானுக்கு இந்த கருத்தை மனதில் கொண்டே ஷாருக்கானுக்கு அட்லீ மீது முழு நம்பிக்கை வரவில்லை என தோன்றுகிறது.

அட்லீ கொடுத்த சாபம் : 

இந்நிலையில் அட்லீ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த போஸ்ட் வைரலாகிறது. அதில் சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்கள் வாழ்க்கையில் வரும். என்னை நம்பு அது கண்டிப்பாக வரும். என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் அட்லீ ஷாருக்கானுக்கு சாபம் விடுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View post on Instagram