Attlee beast dace with wife : விஜயின் பிரியமான இயக்குனர் அட்லீ அவரது மனைவியுடன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்..
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் (Nelson) இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் (Anirudh), தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் (Beast) படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய அரபிக் குத்து (Arabic kuthu) பாடல் வெளியானது முதலே, பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதி ஹபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது. இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.

பொதுவாக ஒரு பாடல் டிரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' (Arabic kuthu) பாடலை மட்டும் சும்மாவா விடுவார்களா என்ன. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் (samantha) தற்போது அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஏர்போர்ட்டில் வைத்து அப்பாடலுக்கு ஆட்டம் போட்டு நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் விஜயின் பிரியமான இயக்குனர் அட்லீ அவரது மனைவி பிரியாவுடன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.. தமிழ் திரையுலகில் இளம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவர், இயக்கத்தில் வெளியான முதல் படமான 'ராஜா ராணி' மணிரத்னத்தின் மௌனராகம் பட சாயலில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும், சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே... ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாருடன் கூட்டணி அமைப்பார், யாரை வைத்து படம் இயக்குவார்? என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து மெர்சல், பிகில், என தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து இயக்கி மாஸ் காட்டினார். தற்போது இவரின் நடன வீடியோ வைரலாகி வருகிறது..
